கர்நாடகாவில் டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். நேற்று சட்டமன்ற கூட்டத்தில் டி.கே சிவகுமார் திடீரென ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சட்ட சபையில் பெங்களூரு சின்னச்சாமி மைதான கூட்ட நெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான ஆர் அசோகா, டி.கே சிவகுமார் அவரது அரசியல் வாழ்க்கையில் முந்தைய காலங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததை சுட்டி காட்டினார். இதனை கேட்டதும் சிவக்குமார் நமஸ்தே சதா வத்சலே என்ற ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடினார் அப்போது எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த பாஜகவினர் மேசைகளை தட்டி சிவக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.