உத்திரபிரதேசம் மாநிலம் திகம்கர் பகுதியில் கணவரை இழந்த ரச்னா தேவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை சரி செய்வதற்காக பக்கத்து கிராமத்தில் வசிக்கும் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சஞ்சயிடம் சென்று உதவி கேட்டுள்ளார்.
அந்த பிரச்சினை தொடர்பாக சஞ்சய் அடிக்கடி ரச்னா தேவியை சந்தித்து பேசியபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரச்னா தேவி கூறியதால் கோபமடைந்த சஞ்சய் அவரை கொலை செய்ய திட்டம் போட்டார்.
அதன்படி ரச்னா தேவியை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி தனது மருமகன் சந்திப் பட்டேலுடன் அங்கு சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரச்னா தேவியை வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இறந்த ரச்னா தேவியின் உடலை 7 துண்டகளாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி கிணற்றிலும், பாலத்திற்கு அடியிலும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ரச்னா தேவியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சஞ்சய் அவரது மருமகன் சந்தீப் பட்டேல் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
