ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் விளையாடும் ஐபிஎல் போட்டியில் தன்மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தன்னுடைய போட்டியின் மூலம் பதிலடி கொடுத்தார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இந்நிலையில் தன்னுடைய அணியின் வெற்றியை கொண்டாடிய இஷான் கிஷன் கடந்த 5-ம் தேதி ஹர்திக் பாண்டியாவை நேரில் சென்று சந்தித்தார். திறமையான இடது கை பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் ஹர்திக் பாண்டியாவுக்கு உலக கோப்பையை வென்றதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அமைதியாக சென்ற இஷான் ஹர்திக் பாண்டியா இருக்கும் அறைக்கு சென்றார். அப்போது பாண்டியாவை இஷான் கட்டி அணைத்து உருண்டார். பின்னர் பாண்டியாவுக்கு முத்தம் கொடுத்தார். அவர்கள் இருவரும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டனர். இதன் மூலம் அவர்கள் நட்பு பிரகாசித்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
