தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கு ஈரோட்டில் இருந்து வந்திருந்த பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அந்தப் பெண், தனது சகோதரி ஒரு வாரக் கர்ப்பிணியாக இருப்பதாகவும், இது நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு கிடைத்த கரு என்றும் கூறுகிறார். வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவோ எச்சரித்தும், “விஜய்யைப் பார்த்தே தீர வேண்டும்” என்ற பிடிவாதத்தில் அந்தப் பெண் மாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். விஜய்யின் கார் வந்தபோது, கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அவருக்குக் கை கொடுக்க அந்தச் சகோதரி முயன்றது பலரையும் பதற வைத்துள்ளது.
இந்தக் காணொளியைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கருவுற்ற ஆரம்ப நாட்களில் (Early Pregnancy) மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், லட்சக்கணக்கானோர் கூடும் மாநாட்டு நெரிசலில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும் பலரும் சாடி வருகின்றனர். “தலைவர் மீதான அன்பு என்பது தற்கொலைக்குச் சமமானதாக இருக்கக்கூடாது” எனப் பதிவிட்டு வரும் மக்கள், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரின் பொறுப்பற்றத்தனத்தைப் பார்த்து கோபத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
