சமூக வலைதளங்களில் தற்போது ஒரு மழலையின் சேட்டை கலந்த வீடியோ வைரலாகி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் ஒரு சிறுவனை, அவனது தந்தை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பள்ளி வாகனத்தில் ஏற்றும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
“பள்ளிக்கு போகவே மாட்டேன்” என அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் அந்தச் சிறுவனைச் சமாளிக்க முடியாமல், தந்தை அவனை அடித்து வண்டியில் ஏற்றிவிட்டு, தானும் அவனுடன் வண்டியிலேயே ஏறிச் செல்லும் வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான தருணம் அதில் பதிவாகியுள்ளது.
@gharkekalesh pic.twitter.com/yqtLKLGsBV
— Arhant Shelby (@Arhantt_pvt) December 18, 2025
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது என் சிறுவயது நினைவுகளைக் கிளறிவிட்டது” என உருக்கமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். “இன்றைய காலத்தில் இது ‘சைல்ட்ஹுட் ட்ராமா’ (Childhood Trauma) என்று சொல்லப்பட்டாலும், அன்றைய காலத்தில் இப்படித்தான் எங்களை மிரட்டிப் பள்ளிக்கு அனுப்புவார்கள்” எனப் பலரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
@gharkekalesh என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 7.45 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பள்ளிக்கூடம் செல்வதற்கு அன்று பட்ட கஷ்டங்களும், இன்று அந்தப் பள்ளிக் காலத்தை மிஸ் செய்யும் ஏக்கமும் இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் அனல் பறக்கின்றன.
