சமூக வலைதளங்களில் ஒரு இளைஞனின் அசாத்திய திறமை குறித்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது உடலை எவ்வித சிரமமும் இன்றி வில்லாக வளைப்பதோடு, கைகளைத் தலைக்கு பின்னால் 360 டிகிரி சுழற்றி காண்போரைக் கலங்க வைக்கிறான்.

பொதுவாக மனித உடலின் எலும்புகள் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே வளையும் தன்மை கொண்டவை. ஆனால், இந்த இளைஞனின் அசைவுகளைப் பார்க்கும்போது, இவருக்கு உடலில் எலும்புகளே இல்லையோ அல்லது அவை ரப்பரால் செய்யப்பட்டவையோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “மனித உடலால் இவ்வளவு கடினமான அசைவுகளைச் செய்ய முடியுமா?” என வியப்பில் வாயடைத்துப் போயுள்ளனர். சில நெட்டிசன்கள் இது கிராபிக்ஸ் (VFX) வேலையாக இருக்குமோ எனக் கேள்வி எழுப்பினாலும், அந்த இளைஞனின் விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

“சர்வதேச அளவில் ஜிம்னாஸ்டிக்ஸ் அல்லது யோகா போட்டிகளில் கலந்துகொண்டால் இவர் நிச்சயம் பல சாதனைகளைப் படைப்பார்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பார்ப்பவர்களின் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு இருக்கும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.