சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ‘ஐஸ் குயின்’ என்று அழைக்கப்படும் கல்கினா அனெச்கா -27 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில், உறைந்த ஏரியின் அடியில் சிக்கிக்கொண்டது போல் ஒரு ஆபத்தான சாகசத்தைச் செய்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், அவர் பனிக்கட்டிக்கு அடியில் மூச்சுவிட முடியாமல் தவிப்பது போலவும், வெளியேற போராடுவது போலவும் தோன்றுவது பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. ஆனால், அடுத்த சில நொடிகளில் அவர் அந்த அடர்த்தியான பனிப்படலத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் கல்கினா அனெச்கா தனது அதீத உடல் திறனுக்காகவும், கடும் குளிரைத் தாங்கும் ஆற்றலுக்காகவும் ‘சூப்பர் ஹியூமன்’ என்று புகழப்படுகிறார். இவரால் பல மணிநேரம் பனிநீருக்கு அடியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு நிமிடம் எங்களின் ஐஸ் குயினை இழந்துவிட்டோம் என்றே நினைத்தோம்” எனப் பதிவிட்டு தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம், இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள் உயிருக்கே உலைய வைக்கும் என்பதால், இவற்றை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
