கரூர் துயர சம்பவத்தில் கூட்டம் நடத்தியது தமிழக வெற்றி கழகம்தான் என்பதால் அதற்கே முழுப் பொறுப்பு என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக அதிமுக கட்சி கடுமையாக எதிர்வாதம் முன்வைத்துள்ளது. “இந்தச் சம்பவத்துக்கு 50 சதவீதம் தவறு தமிழக வெற்றிக்கழகத்துக்கும், 50 சதவீதம் தவறு அரசிற்கும் உண்டு. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு” என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், இதே போல் நடந்த சென்னை ஏர் ஷோ கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சென்னை #AirShow கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,
மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கும் திறன் இன்றி அலட்சியப் போக்குடன் செயல்பட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசால் ஒரு வாய் தண்ணீருக்கு தவித்த மக்கள், வாழ்வாதாரம் இழந்த உயிரிழந்தோரின் குடும்பத்தார் ஆகியோரை… pic.twitter.com/s2rEDgNpau
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) October 6, 2025
இதனைத் தொடர்ந்து, அதிமுக தங்களது அதிகாரப்பூர்வ X (Twitter) மற்றும் IT wing பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை #AirShow கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவோம். மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாமல் அலட்சியமாக செயல்பட்ட ஸ்டாலின் மாடல் அரசு — இதனால் பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூர்ந்து நமது DP-யை கருப்பு நிறத்தில் மாற்றுவோம் அல்லது கருப்பு நிறப் படத்தைப் பதிவிடுவோம். தமிழகம் மறக்கவில்லை; மன்னிக்கவும் போவதில்லை!” எனக் பதிவிட்டுள்ளது. அதிமுகவின் இந்த நடவடிக்கைக்கு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், “Brilliant move — மக்கள் மறந்தாலும் நினைவூட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை” எனக் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Brilliant move. மக்கள் மறந்தாலும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது எதிர்க்கட்சிகளின் கடமை #ChennaiAirShow https://t.co/wtSAjGiMzj
— Savukku Shankar (@SavukkuOfficial) October 6, 2025
