கரூர் துயர சம்பவத்துக்கு பின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏன் சம்பவ இடத்திற்கு இன்னும் செல்லவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்து வருகிறது. இதற்கு பதிலாக, வெற்றிக் கழகத் தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வரை சம்பவ இடத்துக்கு செல்லவில்லை” என்று ஏத்தி கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே விவகாரத்தில் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்ட நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவரிடம் “மணிப்பூர் கலவரம் நடந்தபோது பிரதமர் மோடி செல்லாதது தவறல்லையா?” என்று நெறியாளர் கேட்க, பாண்டே “முதல்வர் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சென்றிருக்க வேண்டியது போலவே, மணிப்பூர் கலவரத்துக்கும் பிரதமர் சென்றிருக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து நெறியாளர் “பதிலுக்கு பதில் பேசாமல், கேள்விக்கே பதில் சொல்லுங்கள்” எனக் கூற, அதற்கு ரங்கராஜ் பாண்டே கடுமையாகப் பதிலளித்து, “நீங்கள் யார் நான் என்ன பேச வேண்டும் என்று தீர்மானிக்க? நான் உங்களிடம் சம்பளம் வாங்குகிறேனா? நீங்கள் சொல்வதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் என்னுடைய தரப்பு வாதத்தை முன்வைப்பேன், பதிலுக்கு பதில் பேசுவேன், எதிர் கேள்வியும் கேட்பேன்” எனக் கடும் ஆதங்கத்துடன் கூறினார். மேலும், “பிரதமர் மோடி குறித்தும், பிறர் குறித்தும் நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசும்போது ஏன் அஞ்சி நடுங்குகிறீர்கள்?” எனக் கேட்க, நெறியாளர் தயங்கி பதிலளித்த காட்சி இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
