தமிழக அரசியல்ல ‘பங்காளி’ சண்டை ஓய்ஞ்சு, இப்ப ‘கூட்டாளி’ சண்டையா மாறியிருக்கு. டிடிவி தினகரன் ஏற்கனவே எடப்பாடியார் தலைமையிலான NDA கூட்டணியில அதிகாரப்பூர்வமா ஐக்கியமாகிட்டாரு. “பழைய கசப்பையெல்லாம் மறந்து, திமுகவை வீழ்த்த ஒண்ணு சேருவோம்”னு அவரே சொல்லிட்டாரு. இதோட ஹைலைட்டே, “டிடிவி வர்றதுக்கு எனக்கு சம்மதம்”னு இபிஎஸ் (EPS) பச்சைக்கொடி காட்டினதுதான். இப்ப ரெண்டு பேரும் ஒரே நேர்க்கோட்டுல வந்துட்டாங்க

​தினகரன் இப்ப மதுரையிலயும் தேனியிலயும் பேசும்போது, “ஓபிஎஸ் எங்கூடத்தான் வருவாரு, அவரு வேற எங்கயும் போக மாட்டாரு”ன்னு ரொம்ப உறுதியா சொல்லிருக்காரு. “தர்மயுத்தம் பண்ணாம இருந்திருந்தா நீங்கதான் இன்னைக்கு முதலமைச்சர், அந்தத் தப்பை இப்ப பண்ணாதீங்க, சீக்கிரம் கூட்டணிக்கு வாங்க”ன்னு ஓபனா கூப்பிட்டு இருக்காரு. ஓபிஎஸ்-க்கும் இபிஎஸ்-க்கும் இடையில இருந்த அந்த ‘ஈகோ’ இப்போ பிஜேபி-யோட சமரசப் பேச்சுவார்த்தையால கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சுட்டு இருக்கிறதாத் தெரியுது.