அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என்றும், ‘பாஜகவின் அடிமை’ என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியது தற்போது பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசிய இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் இந்த விமர்சனத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் அதிரடியாகப் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ்டர்களில், “தவெக தலைவர் விஜய் அவர்களே எச்சரிக்கிறோம்!” என்ற வாசகங்களுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவினர் களமிறங்கியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
