உத்தரபிரதேசம் லக்னோவின் ஆஷியானா பகுதியில் நடந்த அதிர்ச்சியூட்டும் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்று குழந்தைகள்மீது திடீரென ஒரு கார் மோதி சென்றது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. வீடியோவில், மூன்று சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதுவதை காணலாம். பிரேக் அடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், நேராக குழந்தைகள் மீது மோதியதுடன், ஒரு சிறுவனை காரின் பானட்டில் இழுத்துச் சென்றார். பின்னர் கார், ஒரு வீட்டின் இரும்பு கேட்டில் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். அதில், ஒரு சிறுவனின் விலா எலும்பு முறிந்ததால் அவர் தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு, காரில் இருந்த ஓட்டுநர் இறங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் பேசினார்.

“>

 

அந்த நேரத்தில் பயணிகள் இருக்கையில் இன்னொருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் கேட்ட சத்தத்துக்கு அங்குச் சென்று குழந்தைகளை மீட்டனர்.