பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டம் பாகா புராணா பகுதியில், வெள்ளை i20 காரில் பயணம் செய்த ஒருவரை போலீசார் வெகு நேரம் துரத்தி, கடைசியில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறை தகவலின் பேரில் அந்த காரில் போதைப்பொருள் இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், காரை துரத்தத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த நபர் வேகமாக ஓட்டிச் சென்றதுடன், இடமில்லாத பகுதியில் பின்னோக்கி ஓட்டி, பின்னர் வேறு வழியில் சென்று தப்பிக்க முயன்றும் போலீசார் அவரை விரைந்து கைது செய்தனர்.

“>

 

இந்த பரபரப்பான துரத்தலின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், மோகா காவல்துறையின் “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” திட்டத்தின் கீழ் இது நடந்த நடவடிக்கையாகக் கூறப்படுகிறது. போதை விற்பனையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருவதாகவும், இளைய தலைமுறையைப் பாதுகாப்பது தான் குறிக்கோளாக உள்ளது என்றும் மோகா போலீசார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.