குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்பாய் குடும்பத்தில் இருக்கும் ஒரு சிறிய விநாயகர் சிலை தற்போது உலகின் விலையுயர்ந்த சிலைகளில் ஒன்றாக பேசப்படுகிறது. வெறும் 2.44 செ.மீ. அளவிலான இந்த சிலை, சாதாரணமாக வெள்ளை கல்லைப்போல் தோன்றினாலும், உண்மையில் இது முழுமையான Uncut Diamond ஆகும். இதன் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
ராஜேஷ்பாய், இந்த வைரக்கல்லை 2005-ஆம் ஆண்டு காங்கோ நாட்டிலிருந்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை பின்னர் அவரது குடும்பத்தினர் விநாயகர் சிலையாக வடிவமைத்து வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். சிறிய அளவிலேயே மிகப்பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் இந்த விநாயகர் சிலை, அரிதான வைரக்கலால் ஆன தனித்துவத்தால் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது.
