மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஹோட்டல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் என எழுதி வைத்துள்ளனர்.

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நெட்டிசன் ஹோட்டலில் இருப்பதைப் போல திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் உணவை வீணாக்க கூடாது என்ற விதி இருந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் பிடிக்காத உணவை எப்படி சாப்பிட முடியும் என கமெண்ட் செய்துள்ளார். சோசியல் மீடியாவில் பலரும் ஹோட்டலின் செயலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.