மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 20) மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சமாக, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களுக்குத் தாங்கள் வகிக்கும் தேர்தல் பதவியை இழக்கும் விதி இடம்பெற்றுள்ளது. இது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கே நேராக தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பல அரசியல் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான X – தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்! இது ஒரு கறுப்பு மசோதா! சர்வாதிகார ஆட்சி இப்படித்தான் ஆரம்பமாகிறது. மக்கள் மனப்பான்மைக்கு எதிரான இந்த சட்டம், ஜனநாயகத்தின் வேரையே துளைக்கும் வகையில் உள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளை சுருக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும், எதிர்ப்பு மேலும் தீவிரமாகும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

“>