பாலியல் உறவுக்கு பரஸ்பரம் சம்மதம் தெரிவிப்பதற்கான வயது வரம்பு தற்போது 18 ஆக உள்ள நிலையில், போச்சா சட்ட வழக்குகளில் அதை 16 ஆக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வயது 18 ஆக நீடிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியதாவது, ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஏராளம் உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் காதல் கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது அந்த காதலை குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?

கற்பழிப்பு போன்ற குற்ற செயல்களையும் உண்மை காதலையும் நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். உண்மை காதலர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை குற்ற வழக்குகள் போல நடத்தக்கூடாது. போக்சோ வழக்குகளில் பெண்ணின் பெற்றோர் அளிக்கும் புகாரால் சிறைக்கு அனுப்பப்படும் வாலிபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இருவரும் ஓடிப்போனதை மூடி மறைக்கவும் சட்ட புகார்கள் அளிக்கப்படுகிறது. இது சமுதாயத்தின் கசப்பான எதார்த்தம் எனக்கூறி வழக்கு விசாரணையை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.