பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கியா காட்டில் நடைபெற்ற நாக பஞ்சமி திருவிழா, மிதிலா பகுதி முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது.
இத்திருவிழா, ககாரியா, சஹர்சா, பெகுசராய் மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மதச் சடங்குகளின் ஒரு பகுதியாக, மக்கள் பாம்புகளை நேரடியாக தங்கள் உடலில் சுமந்து பங்கேற்கும் இந்த நிகழ்வு, பாரம்பரியத்திற்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டு எனப்பேசப்படுகிறது.
View this post on Instagram
“>
சிங்கியா பஜாரில் உள்ள மா பகவதி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து, பின்னர் பக்தர்கள் புத்தி கண்டக் நதிக்கரைக்கு சென்று, தங்கள் கழுத்தில், கைகளில், தலையிலோ பாம்புகளை வைத்து ஊர்வலமாக சென்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாம்புகளை ஆவலுடன் சுமந்த வண்ணம், முழு கூட்டமும் பக்திப் பரவசத்தில் காணப்பட்டது. சிலர் பாம்புகளால் சுற்றப்பட்ட மரக்குச்சிகளை எடுத்துச் சென்றனர். பாம்புகளை ஆபத்தான உயிரினங்களாக அல்லாமல், தெய்வீக பரிசுகளாகவே கையாண்டனர்.
நாக பஞ்சமி நாளில், உள்ளூர் பாம்பு தெய்வமான மாதா விஷரிக்கு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அர்ப்பணித்தனர். சிலர் பாம்புகளை வாயில் பிடித்து நடைபயிற்சியும் செய்துள்ளனர். வழிபாடுகளுக்குப் பிறகு, பாம்புகள் பாதுகாப்பாக அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விட்டுவிடப்பட்டன. பெண்கள், வீட்டுப் பாதுகாப்பு, கருவடை, மற்றும் குடும்ப நலனுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அவர்கள் விருப்பங்கள் நிறைவேறிய பிறகு நாக பஞ்சமி அன்று திரும்பி வந்து நன்றியுடன் பிரசாதம் வழங்கினர்.
खिलौने की तरह सांप को गले में लटकाते हैं लोग
बिहार के समस्तीपुर जिले के विभूतिपुर प्रखंड के सिंघिया घाट में नागपंचमी के अवसर पर एक अनोखा और अद्भुत सांपों का मेला लगता है. इस मेले में बच्चे से लेकर बूढ़े तक सभी लोग सांपों के साथ खेलते हुए नजर आते हैं, जो उनके गले और शरीर में… pic.twitter.com/GXrfgxMSHD
— NDTV India (@ndtvindia) July 15, 2025
“>
இந்த பாரம்பரிய விழா நூற்றாண்டுகளாக தொடர்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பரபரப்பாகக் காணப்படும் இந்த பக்தி நிகழ்வில் இதுவரை எந்தவொரு பாம்பு கடிதல் சம்பவமோ, காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள், இந்த வித்தியாசமான ஆன்மிக நிகழ்வை உலகளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
