கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளி வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின் மீது விழுந்த காலணியை எடுக்க அதில் ஏறிய எட்டாம் வகுப்பு மாணவர் மிதுன், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தாழ்வாக வழியாக சென்ற மின்கம்பி ஒன்று, தகரக் கொட்டகைக்கு மிக அருகில் இருந்ததாக தெரிகிறது. மாணவர் மிதுன் கொட்டகையின் மீது ஏறியபோது, அவரது உடலால் அந்த மின்கம்பியைத் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் உடலுக்குள் பாய்ந்து , மாணவர் திடீரென மின்கம்பி மீது விழுந்தார். அருகில் இருந்தவர்கள் பதற்றத்தில் அவரை மீட்டும், அவர் அதற்குள் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தையும், மின்சாரத்துறையையும் தவறுக்கூறும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்குள் இவ்வளவு அருகிலேயே மின்கம்பி போடப்பட்டிருப்பது மற்றும் பாதுகாப்பு மீறல் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
