சாலையோரத்தில் ஆரஞ்சுப் பழம் விற்பனை செய்யும் முதியவர் ஒருவர், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ‘ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்’ போனில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
“நம்ம ஊர் ஐடி ஊழியர்களே யோசித்து வாங்கும் போனை, ஒரு பழ வியாபாரி அசால்ட்டாக வைத்திருக்கிறாரே” என நெட்டிசன்கள் வாயைப் பிளந்து வருகின்றனர்.
View this post on Instagram
“நீங்க வேறொருவருக்கு ஊழியர், அவர் தன் தொழிலுக்கு முதலாளி” என சிலர் கமெண்ட் செய்ய, சிலரோ “இது வெறும் ஐபோன் மாடல் ஸ்டிக்கர் அல்லது கவர்” என கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த ‘ஆரஞ்சு’ நிற ஐபோன் வீடியோ இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்.
