சீனாவின் பெய்ஜிங் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், ஒரு டெலிவரி ஊழியர் சாலையோரம் அமர்ந்து அவசரமாக உணவு உட்கொள்ளும் காட்சி அங்கிருந்த ஒரு கார் ஓட்டுநரால் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காட்சியில், அந்த ஊழியர் குளிரில் உடல் நடுங்கியபடி உணவைச் சாப்பிடுகிறார். அவ்வளவு குளிரிலும் அவரது கண்கள் தொடர்ந்து தனது செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை உணவைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் அடுத்த ஆர்டர்  வந்துவிட்டால், அதைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற அச்சமே இதற்குக் காரணம்.

“>

 

ஒருபுறம் உடல் குளிரால் நடுங்கினாலும், மறுபுறம் தனது வாழ்வாதாரத்திற்காக அந்த ஊழியர் காட்டும் அர்ப்பணிப்பு, இன்றைய ‘கிக் எகனாமி’ தொழிலாளர்களின் கடின உழைப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.