பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73), சிறையில் போதிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவசர மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த நீதிமன்ற உதவியாளர் ) சல்மான் சஃப்தர், இது தொடர்பான விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், இம்ரான் கானின் வலது கண்ணில் தற்போது 15 சதவீதப் பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தனது சகோதரரின் நிலைமையைக் கேட்டு இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, அக்டோபர் 2025 வரை இம்ரான் கானுக்கு இரு கண்களிலும் தெளிவான பார்வை (6/6 vision) இருந்துள்ளது. அதன் பிறகு, கண்ணில் மங்கலான பார்வை தெரிவதாக அவர் சிறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களைச் சந்திக்க அனுமதி கோரியும், சிறை நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சாதாரணக் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே வழங்கியதால், பாதிப்பு தீவிரமடைந்து ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு அவசர ஊசி செலுத்தப்பட்டாலும், பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலையை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில், இது பாகிஸ்தான் ராணுவத்தின் “மறைமுக ஒழிப்பு முறை” (ன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சிறையிலுள்ள அரசியல் எதிரிகளை முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்காமல் நசுக்குவது பாகிஸ்தான் ராணுவத்தின் வழக்கமான பாணி என்று அந்தச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.