ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் தூதராக முன்னாள் தலைசிறந்த சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை நியமித்துள்ளது.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டி மற்றும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி போன்றவைகளில் இந்தியா கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். மேலும் ஏற்கனவே டி20 உலகக்கோப்பை போட்டியின் தூதராக அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மற்றும் கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஷ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.