ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி20 உலக கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் பற்றிய தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் இருப்பார்.

அவரால் எப்போது வேண்டுமானாலும் மாற்றத்தின் போக்கினை மாற்ற முடியும். அதன்பிறகு பவுலிங்கை பொருத்தவரையில் பும்ரா மற்றும் யஸ்வேந்திரசிங் சாகல் ஆகியோர் சிறப்பான முறையில் செயல்படுவார்கள். இதேபோன்று தினேஷ் கார்த்திக்கிற்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் அணியில் இல்லாவிட்டால் அவருக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

அதோடு இந்த தொடரில் நான் ஷிவம் துபேவை பார்க்க விரும்புகிறேன். மூத்த வீரர்கள் ஃபார்மில் இருந்தாலும் வயது காரணமாக அவர்கள் மீது விமர்சனங்கள் எழும். இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைசிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஓய்வை அறிவிக்க விரும்பினால் அவர்களுக்கு அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாக டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மூத்த வீரர்களே விளையாடி வருவதால் நான் இளம் வீரர்களை போட்டியில் பார்க்க விரும்புகிறேன். மேலும் இது அடுத்த டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்க உதவும் என்று கூறியுள்ளார்.