புதுச்சேரி அரசியல் களத்தில் திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக, 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று மதியம் 3 மணிக்கே அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளதால், கூட்டணி அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

​ஏற்கனவே புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமூக உடன்பாடு ஏற்படாமல் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருக்கும் சூழலில், தேமுதிகவின் இந்தத் திடீர் முடிவு தேர்தல் களம் சூடுபிடிக்கக் காரணமாகியுள்ளது.