ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனைப் பாலப் பகுதியில் இந்தச் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காட்டம்பூரில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கிரிஷ் மிஸ்ரா, லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அப்போது லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாயை அவர் திருடியதாகக் கூறப்படுகிறது. வாகனம் நின்றவுடன் இறங்கிச் செல்ல முயன்ற அந்த அதிகாரியை, லாரி ஓட்டுநர் மகேஷ் தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து ஓட்டுநர் சோதனையிட்டபோது, அதிகாரியின் சீருடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்த அதிகாரியைச் சரமாரியாகத் தாக்கியதால் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உதவி ஆய்வாளரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் யஷ்பால் சிங், உதவி ஆய்வாளர் கிரிஷ் மிஸ்ராவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஓட்டுநரின் புகாரின் அடிப்படையில், துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
