ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்காக மேலும் இரண்டு புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், இவை கூடுதல் டேட்டா பயன்பாட்டிற்கான டேட்டா பூஸ்டர் திட்டங்களாகும்.

இவற்றின் விலையை ரூ.101 மற்றும் ரூ.251 என ஜியோ நிர்ணயித்துள்ளது. ரூ.101 திட்டம் 100 ஜிபி டேட்டாவையும், ரூ.251 பேக் 500 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டங்களுக்கு சிறப்பு காலாவதி தேதி எதுவும் இல்லை. இவற்றுக்கு அடிப்படை திட்டக் கட்டணமும் பொருந்தும்.