நியூரால்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கி மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வை செய்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த 2016 மனித மூளையை கணினியுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு நியூராலிங்க் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கியிருந்தார். இதில் மனித மூளையின் ஆற்றல்களை தெரிந்து கொண்டு பல நோய்களை தடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

மேலும் கணினியோடு மனித மூளையின் நிற்பதன் மூலமாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல விஷயங்களை கண்டறிய முடியும் எனவும் இந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது. அதன்படி வெற்றிகரமாக மனித மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் படிப்படியாக குணமடைந்து வருகிறார் என்று எலான்மஸ்க் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். இந்த முதல் சிப்புக்கு டெலிபதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.