தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுகவினரின் ஊழல் பட்டியல் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டிய அண்ணாமலை 500 கோடி இழப்பீடு தர வேண்டும் எனக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டு அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் பணியில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாகவும் பாஜகவின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்ததற்கு 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என கூறியுள்ளார்.