பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில், பெண் ஆசிரியர்களின் புகைப்படங்களை ரகசியமாகத் தனது மொபைல் போனில் வைத்திருந்த ஆண் முதல்வர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 20-ம் தேதி, முதல்வர் சாஜித் இக்பால் கைஃபி தனது போனில் ஒரு புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அதைக் கவனித்த ஒரு பெண் ஆசிரியை அதிர்ச்சியடைந்து மற்றவர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் அவரது போனைச் சோதித்தபோது, இரண்டு பெண் ஆசிரியர்களின் சுமார் 150 புகைப்படங்கள் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் செயலால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து பதிவிறக்கம் செய்ததாக முதல்வர் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பணியிட கண்ணியம் குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
