ஆடு ஒன்றுக்கு 3 ராட்சத கொம்புகள் இருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ராட்சத வெள்ளை கிடா ஒன்று இருக்கிறது. அதற்கு 3 பெரிய கொம்புகள் உள்ளது. பார்ப்பதற்கே அச்சுறுத்தும் விதமாக இருக்கும் அந்த கிடா, அதிசயமாக படைக்கப்பட்டிருக்கிறதோ என எண்ணுகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள ஆட்டு இனங்களில் ராட்சத கிடா இருக்கும் ஆடு இனங்கள் பல இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த கிடாவும். எனினும் அந்த கிடாக்களுக்கு 3 கொம்புகள் எல்லாம் இல்லை. ஆனால் வீடியோவில் உள்ள கிடாவுக்கு தான் 3 கொம்புகள் அதிசயமாகவுள்ளது. இது படைப்பின் அதிசயம் என்றே கூறலாம்.