பொதுவாக பறவை இனங்களில் கழுகு மட்டுமே 70 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. 70 ஆண்டு காலம் வாழ வேண்டும் என்றால் அது 40 வயதில் தன்னை உருமாற்றம் செய்ய வேண்டும். கழுகு 40 வயதை அடையும்போது அதன் அலகு வளைந்து இறையைப் பிடிப்பதற்கும் உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதே சமயம் அதன் இறக்கைகளும் தடித்து பறப்பதற்கு கடினமாக மாறிவிடும்.

இந்நிலையில் ஒன்று இறப்பது அல்லது வலிமைமிக்க நிகழ்விற்கு தன்னையே உட்படுத்துவது என இவை இரண்டும் தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் ஆகும். இதற்கு கழுகு 150 நாட்கள் வேதனையை அனுபவித்து தன்னை புதிய பலனாக்கி மறுபிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழும். இத்தகைய ஆச்சரிய குணம் கொண்ட கழுகு ஒன்று தற்போது மீனை வேட்டையாடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.