ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மனைவி குறித்து ஜி.வி.பி முன்னர் பேசிய விஷயம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜூன் 27ம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி monthyversary என சொல்லி சைந்தவி ஏதாவது பரிசு கொடுப்பாராம்.

ஒவ்வொரு மாதமும் தனக்கு மனைவியிடமிருந்து தவறாமல் பரிசு கிடைக்கும் என கூறியிருக்கிறார். இப்படி இருந்தவர்களா பிரிந்துவிட்டனர் என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.