பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி பதவி இல்லாததால் அரசு பங்களாவை காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுலுக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் #MeraGharAapkaGhar என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. என் வீடே உங்கள் வீடு என்பதே இதன் அர்த்தம் ஆகும். காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டு வாசலில் இந்த வரிகளை ஒட்டி அதனை போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.