ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரில் தலீபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றினர். இந்த போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடிக்காமல் பல இடங்களில் கிடைத்துள்ளது. வெடிக்காத குண்டுகளை வைத்து விளையாடிய போது அது வெடித்ததில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி இருப்பதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்ற வாரம் அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் இறந்தனர். அவற்றை எடுத்து குழந்தைகள் விளையாடிய போதும், உலோக துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்த போதும் இந்த சம்பவம் நடந்துள்ளது. நில கண்ணி வெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடி குண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால் நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.