இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தது. இந்நிலையில் தற்போது தேசிய பரிவர்த்தனை கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது யுபிஐ மூலம் பணி பரிவர்த்தனைகள் செய்வது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.

ஏப்ரல் 1-ம் தேதி யுபிஐ செயலிகளில் இரண்டாயிரத்திற்கும் மேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது டிஜிட்டல் வாலெட்-ஐ கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கானது. எனவே யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.