பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் அட்லி, “ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பது மட்டும்தான், என்மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம். கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ், பா.ரஞ்சித் போன்ற நண்பர்கள் ஆக்ஷன், சமூக பிரச்னை என வெவ்வேறு விஷயங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கின்றனர்.

நடிகர்களை மையப்படுத்தும், மாஸ் கமர்ஷியல் திரைக்கதை மீது நான் ஒருவன் மட்டும்தான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே என்மீது விமர்சனம் வரத்தான் செய்யும். பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை அளித்து, என்னுடைய கதாபாத்திரங்கள் வாயிலாக அவர்களை உணர்ச்சிவசப் படுத்துவதுதான் எனது நோக்கம். இதுவரை அதை சரியாக செய்துள்ளேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.