சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர் . இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினி, இயக்குநர் நெல்சனுக்கு கார் மற்றும் செக் வழங்கி கலாநிதிமாறன் பரிசளித்திருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் Porsche காரை பரிசளித்துள்ளார்.

இது குறித்து பேசிய  இசையமைப்பாளர் அனிருத், “ஜெயிலர் படமே எனக்கு GIFTதான். முதல்முறையாக இசையமைப்பாளரை கௌரவித்துள்ளார்கள். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சார் கொடுத்த காரை பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.