பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இசிஎச் டிஜிட்டலின் தலைமையகத்துக்கு சென்று சன்னி லியோன் தனது விசாவைப் பெற்றார். இசிஎச் சிஇஓ இக்பால் மார்கோனியிடம் இருந்து 10 வருட கால அனுமதி கொண்ட கோல்டன் விசாவுடன் கூடிய பாஸ்போர்ட்டை சன்னி லியோன் பெற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரத்திற்கு சன்னி தனது நன்றியைத் தெரிவித்தார். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பார்த்திபன், அமலா பால், திரிஷா, மம்மூட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.