சூர்யா நடிக்கும் 43 படத்தில் ஹீரோயினியாக பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 43 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார் என சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நஸ்ரியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.