தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
தனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், தவெக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பெயரை மறைமுகமாகக் குறியிட்டு, “என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை; வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் தான்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல், திமுக தொண்டர்களை உசுப்பும் விதமாக, “நம்ம ஆட்சி போயிடுச்சுன்னு யாரும் கவலைப்பட்டு சோர்ந்து உட்கார்ந்துடாதீங்க; இன்னும் நாலு மாசம், ஆறு மாசம்தான்.. அதுக்கப்புறம் பாருங்க” என்று சவால் விடும் தொனியில் பேசி ஒட்டுமொத்த கோட்டை வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளார். தவெக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக விடுத்துள்ள இந்த அரசியல் எச்சரிக்கை, விவாதங்களை உருவாக்கியுள்ளது.
“என் பேரு ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை.. வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் தான்.. நம்ம ஆட்சி போச்சுனு நினைக்காதீங்க.. இன்னும் 4 மாசம், 6 மாசம்தான்” – திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சை பேச்சு#AnithaRadhakrishnan | #DMK pic.twitter.com/leYp6ONPSk
— PttvOnlinenews (@PttvNewsX) May 19, 2026
“>
