சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் அரசுப் பொதுப்பணித்துறை மற்றும் சாலைக் கட்டுமானப் பணிகளைத்(மழை நீர் வடிகால் ) தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார்.

அப்போது,Contractor தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தரம் குறைவாக இருப்பதையும், அளவீடுகளில் குளறுபடிகள் நிலவுவதையும் கண்டறிந்த அவர், சம்பவ இடத்திலேயே அதிகாரிகளை அழைத்துக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

“பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் பணிகளில் ஒரு இன்ச் (Inch) கூட தரம் குறையக் கூடாது; தரம் இல்லாமல் அரைகுறையாகச் செய்யப்படும் பணிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ‘பேமெண்ட்’ (Payment) வழங்கக் கூடாது, உடனடியாக நிதியை நிறுத்த வேண்டும்” என்று களத்தில் நின்று அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் இந்த சமரசமற்ற ‘ஸ்பாட் ஆக்ஷன்’ (Spot Action) ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் ‘பகீர்’ கிளப்பியுள்ள அதேவேளையில், தொகுதி மக்கள் மத்தியில்  வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வேற லெவலில் ரீச் ஆகி வைரலாகி வருகிறது.

“>