தாய்லாந்தில் திருமணமான ஆண் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவரை விவாகரத்து செய்ய விரும்பாத அவரது மனைவி, கணவனையே அந்தப் பெண்ணிடம் மாத வாடகைக்கு விட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த குன் என்ற பெண்ணின் கணவர், வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த குன், தனது கணவரை பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் அவர் அந்த உறவைக் கைவிடவில்லை. கணவர் தனது பேச்சைக் கேட்காததால் மனமுடைந்த குன், அதேசமயம் அவரைப் பிரியவும் விரும்பவில்லை.
தொடர்ந்து தனது கள்ளக்காதலியுடன் இருக்க வேண்டும் என அடம்பிடித்த கணவருக்கு, அவரது மனைவி குன் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். அதாவது தன்னுடைய கணவனை வைத்திருக்க அந்த பெண்ணுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ளக்காதல் தொடர வேண்டும் எனறால் அதற்கு ஈடாக, அந்தக் காதலி அல்லது கணவர் குன்னிற்கு மாதந்தோறும் ரூ. 85,000 (இந்திய மதிப்பில்) வாடகையாகச் செலுத்த வேண்டும்.
விவாகரத்தைத் தவிர்க்க மனைவி எடுத்த இந்த வினோதமான “வாடகை” முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து கள்ளக்காதலியைத் தொடர அவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் தற்போது இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், மனைவியின் இந்த அதிரடி முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
