உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், பத்திரிகையாளர் நிருபேந்திர திவாரியின் 12 வயது மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, மின்னல் வேகத்தில் வந்த கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர். ஆனால், அதன் பிறகுதான் அந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் ‘வாட்ஸ்அப் வீடியோ கால்’ வந்தது.
சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, “காவல்துறைக்குத் தகவல் கொடுத்தால் உன் மகளின் கழுத்தை நேரலையிலேயே அறுத்துக் கொல்வோம்” என அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த வீடியோ காலானது துபாயுடன் தொடர்புடைய ஒரு எண்ணிலிருந்து வந்திருப்பதைக் கண்டறிந்த போலீசார், உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை வைத்து அந்த சர்வதேசக் கடத்தல் கும்பலை வளைக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் உயிருக்கு ஆபத்து என்பதால் ஒட்டுமொத்த மாவட்டமே பதற்றத்தில் உறைந்துள்ளது!
