உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரியும் மேனகா சவுகான், தனது தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பு கோரியுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் தினேஷ் சந்திர சவுத்ரி, விடுப்பு தர மறுத்ததோடு பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைத் தாக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதாக மேனகா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் தனது ஐந்து வயது குழந்தையுடன் உயர் அதிகாரிகளைச் சந்தித்து கண்ணீர் மல்க முறையிட்டார். இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த காவல் கண்காணிப்பாளர் யஷ்வீர் சிங், உடனடியாகச் செயல்பட்டு காவல் நிலையப் பொறுப்பாளர் தினேஷ் சந்திர சவுத்ரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
उत्तर प्रदेश के बस्ती जिले की सदर कोतवाली से एक हैरान करने वाला मामला सामने आया है. यहां तैनात एक महिला कांस्टेबल ने कोतवाल पर गंभीर आरोप लगाए हैं. महिला कांस्टेबल का कहना है कि मां की बीमारी के कारण छुट्टी मांगने पर कोतवाल ने भद्दी गालियां दीं और उन्हें मारने के लिए भी दौड़… pic.twitter.com/kbHgmtVsdF
— AajTak (@aajtak) February 19, 2026
“>
மேலும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
