தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி ரிலீசான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு அஜித் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பைக் ரைடர், துப்பாக்கி சுடுவதில் வல்லவர், சிறிய வகை ஹெலிகாப்டர் செய்வார் என்பன ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்நிலையில் நடிகர் அஜித் நன்றாக சமையலும் செய்வார் என்று தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது நடிகர் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்திருந்த ராஜ் ஐயப்பா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் சமையல் குறித்து அவர் பேசியிருக்கிறார். அவர் அஜித் சார் அமைக்கும்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர் நன்றாக சமைப்பார். நான் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது  என்று சொன்னேன். அதற்கு நடிகர் அஜித் நிறைய லவ்வோடு சமைக்கிறோம். அதனால்தான் அப்படி இருக்கிறது என்று அஜித் சொன்னாராம். மேலும் நடிகர் ராஜ் ஐயப்பா அஜித் பற்றி பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் வருகிறது.