ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது கணவருடன் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக, போலீஸ் பாதுகாப்பு இல்லாத 21 நாட்கள் பரோல் வழங்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் முக்கிய கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி  மூன்று கொலைகள் போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்து, அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் குழந்தை என்ற களங்கத்துடன் ஒரு குழந்தை இந்த உலகில் வளர வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் அத்தகைய சமூகக் களங்கத்துடன் ஒரு குழந்தை வளர்வதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. நடைமுறையில் உள்ள இத்தகைய சமூக யதார்த்தங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சமூக பாதிப்புகள் மற்றும் குற்றப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அந்த மனுவை அதிரடியாக நிராகரித்தது.