டெல்லி திலக் நகரில் நடந்த இந்த விபத்து, ஒரு தந்தையின் தன்னலமற்ற அன்பை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதிவேகமாக வந்த கார் தன் மகள் மீது மோதப் போவதைக் கண்ட அந்தத் தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் மகளைப் பக்கவாட்டில் தள்ளிவிட்டு, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.

​இந்த நெஞ்சை உருக்கும் சிசிடிவி காட்சி தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்த தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.