சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி வெளியாக கூடிய செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் சில சமயங்களில் நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் பூனை ஒன்று எலியை தேடி கொண்டு வருகிறது. அந்த எலி அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவரின் கால் பகுதியில் பேண்ட் மடிப்பில் ஒளிந்து கொள்கிறது. பூனை தேடி பார்க்க அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எலியும் பேண்ட் கலரில் இருந்ததால் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொண்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Video Kucing Lucu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@benerankucing)