நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட நிலையில் சீமான் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை அடிக்கடி சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சீமான் அந்த நடிகையை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு பணத்திற்காக தான் இப்படி செய்வதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அடிக்கடி சீமானை விமர்சித்து வீடியோ வெளியிடும் நடிகை  மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சீமான் உச்ச நீதிமன்றம் சென்ற போது அந்த நடிகைக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

அதற்கு சீமானின் வழக்கறிஞர்கள் ஆமாம் நாங்கள் அதைப் பற்றி தான் பேசுகிறோம் என்று கூறி இடைக்கால தடை வாங்கினர். ஆனால் சீமான் வெளியே வந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த நடிகைக்கு நாங்கள் இழப்பீடு எதுவும் கொடுக்கப் போவதில்லை என்கிறார்.

இதன் காரணமாக மீடியாவுக்கு எனக்கு இழப்பீடு கொடுத்தார்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக தான் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளேன். நான் 14 வருடங்களாக இந்த வழக்கில் போராடி வருகிறேன்.

உங்களுக்கே தெரியும் இதில் எந்த அரசியலும் கிடையாது என்று. ஆனால் சீமான் தான் தப்பிப்பதற்காக இதற்கு பின்னால் திமுக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கிறது என்று கூறுகிறார். ஒருவேளை சீமான் தவறு செய்யாமல் இருந்தால் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே.

ஆனால் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் எல்லா விஷயங்களும் வெளியே வந்துவிடும் என்பதால் தான் உடனடியாக சுப்ரீம் கோர்ட் சென்று தடை வாங்கியுள்ளார். என்னை சீமான் 14 வருடங்களாக பாலியல் தொழிலாளி என்று சொன்னதை நான் கண்டிப்பாக சும்மா விடமாட்டேன்.

எனவே இந்த வழக்கிலிருந்து பின்வாங்க பெரிய தொகை செட்டில்மெண்ட் வாங்கியாச்சு என்று யாரும் செய்தி பரப்பாதீர்கள். மேலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை கண்டிப்பாக சீமான் பின்னால் சென்ற போராட நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.